போளூரை அடுத்த வசூரில் பஸ் நிறுத்தம் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தென்னை மரம் ஒன்று உள்ளது. இந்த மின்விளக்கின் வெளிச்சத்தை முழுவதுமாக தென்னைமரம் மறைத்து விடுகிறது. அந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தென்னை மரத்தை வெட்டி பொதுமக்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.
-விவேகானந்தன், வசூர்.