செங்கம் நகராட்சி 3-வது வார்டு தளவாநாயக்கன்பேட்டை பகுதியில் படையப்பா தெருவில் மின் விளக்குகள் எரியவில்லை. அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் திருட்டு பயம் உள்ளது. பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டமும் உள்ளது. தெரு மின் விளக்குகளை எரியவிட பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-புனிதன், தளவாநாயக்கன்பேட்டை, செங்கம்.