மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கிடாரிப்பட்டி கிராம ஊராட்சி அழகிஅம்மன் கோவில் தெருவில் பல மாதங்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இந்த இருளை பயன்படுத்தி சமூக விரோதிக்ள வழிப்பறி மற்றும் திருட்டு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?