ஆண்டிப்பட்டி பேரூராட்சி வட்டாசியர் அலுவலகம், வருவாய் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு 2 உயர்கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது. இந்த உயர்கோபுர மின்விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த உயர்கோபுர மின்விளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.