இடியும் நிலையில் டிரான்ஸ்பார்மர்

Update: 2026-11-15 14:16 GMT

பர்கூர் அருகே பெலவர்த்தி பஞ்சாயத்துக்குட்பட்ட வள்ளுவர்புரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கு வரட்டன பள்ளி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்கிறது. இந்தநிலையில் வள்ளுவர்புரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று சிமெண்ட் கம்பங்கள் சிதிலமடைந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. மேலும், அந்த டிரான்ஸ்பார்மர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மின்சாரத்துறை அதிகாரிகள் மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்