திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி ஊராட்சி அண்ணாநகர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பல ஆண்டுகளாக மின் கம்பம் ஒன்று சேதம் அடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் மின் கம்பத்தை மாற்றப்படாமல் வைத்துள்ளனர். அந்த மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஜினி, திருப்பத்தூர்.