கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் கடந்த 3 மணி நேரமாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து உதவி மின் பொறியாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மின்தடையைச் சரிசெய்யக் கோரியும், உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின்சார வினியோகத்தைச் சீரான முறையில் தர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.