மதுரை அவனியாபுரம் அருகே அமைந்துள்ளது காவேரி தெரு. இங்கு போதுமான அளவு தெரு விளக்குகள் இல்லை. மேலும் இருக்கின்ற விளக்குகளும் ஒளிராமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. சில விளக்குகள் மிகவும் மந்தமாக எரிகிறது. இதனால் இரவில் வாகனங்களில் வருபவர்களும், நடந்து செல்பவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?