திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் வள்ளலார் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதால் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையினால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.