வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆத்துமேடு பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகில் ஒரு மின்கம்பம் ஆபத்தான, சாய்ந்த நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ளது. அந்தக் கம்பம் எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தை மாற்றி அமைத்துத் தருவார்களா?
-லிங்கராஜ், வாணியம்பாடி.