கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2026-10-25 15:39 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியில் உள்ள சுகந்த பரிமளேஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இருக்கும் சில விளக்குகளும் சரியாக எரியாததால் இரவு நேரங்களில் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இருளைப் பயன்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறும் அபாயம் இருப்பதால், கோவில் சாலையில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்