தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2026-10-25 15:20 GMT


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் கிராமத்தில் வயல்வெளியில் தாழ்வான நிலையில் மின்கம்பிகள் செல்கிறது. இதனால் வயல் வெளியில் வேலைசெய்யும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மேலும் காற்று பலமாக வீசும் போது மின் கம்பிகள் நடந்து செல்பவர்கள் மீது மோதும் படி செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ராமாபுரம் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மின்வாரியத்தினர் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பொதுமக்கள், ராமாபுரம்.

மேலும் செய்திகள்