கூடலூரில் ஆர்.டி.ஓ. அலுவலகம், போலீஸ் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலம் ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அந்த தெருவிளக்குகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.