மின்கம்பம் மாற்றப்பட்டது

Update: 2026-10-18 09:41 GMT

தென்தாமரைகுளம் பேரூராட்ச்சி முகிலன்குடியிருப்பில் உள்ள இலந்தையடிவிளை அரசு உயா்நிலைபள்ளியின் அருகில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காண்பபடுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி படத்துடன் வெளியிட்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதியை மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

-மதன், முகிலன்குடியிருப்பு.

மேலும் செய்திகள்