ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-10-18 09:44 GMT

மேல ஆசாரிபள்ளம் வி.எஸ்.தெரு உள்ளது. இந்த தெருவில் டிரான்ஸ்பார்மரின் அருகில் அடுத்தடுத்து 3 மின்கம்பகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மெர்லின் ஷைலஜா, கீழ் ஆசாரிப்பள்ளம்.

மேலும் செய்திகள்