சென்னை தாம்பரம், திருவள்ளுவர் தெருவில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து உள்ளது. அந்த மின்கம்பம் சிதிலமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. எப்போதுவேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால், அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை சரிசெய்யவேண்டும்.