திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளிக்கு அருகில் உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து உள்ளது. இதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் இருக்கிறது. மேலும்இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.