கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி சாலைப்புதூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 4 தெருவிளக்குகளில் 2 தெருவிளக்குகள் எரியாததால் தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் இரவு நேரங்களில் வீடுகளுக்கு செல்லவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்து சாலைப்புதூர் பகுதியை ஒளிரச் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.