எரியாத தெருவிளக்குகள்

Update: 2026-10-04 18:42 GMT


திருப்பூரை அடுத்த கரைப்புதூர் ஊராட்சியில் சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாக பல இடங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் வேலைமுடிந்து இரவு வீட்டுக்கு வரும் பெண்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் விபத்துகளும், இரவு நேரங்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நிகழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், அருள்புரம்.

மேலும் செய்திகள்