ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள அரசு நூலகத்தில் மின்விசிறி, மின்விளக்கு வசதிகள் இருந்தும், அவை பழுதடைந்த நிலையில் உள்ளன. நூலகத்துக்கு வரும் வாசகர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். நூலகத்தில் மின்விசிறி, மின் விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், வாலாஜா.