ஆபத்தான மின்மாற்றி

Update: 2026-11-22 17:32 GMT
திருப்பாதிரிப்புலியூர் அருகே வண்டிப்பாளையம் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் எதிரே உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பம் பலத்த சேதமடைந்து அதன் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. தற்போது மின்மாற்றி மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உருவாகி உள்ளது. அருகே தொடக்கப்பள்ளி உள்ளதால் ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்