நாமக்கல் மாவட்டம் நல்லூரில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்டுப்பட்டி கிராம மக்கள் வந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கனை வாங்கி செல்வார்கள். அப்பகுதியில் நல்லூர் ஊராட்சி சார்பில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் மின் விளக்குகள் இல்லாமல் அப்பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.