ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பங்கள் வழியே, தனியார் கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ஒயர்கள் மூலம் மின்சாரம் கசிந்து விபத்து அபாயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பங்கள் வழியே கொண்டு செல்லும் தனியார் கேபிள்களை அப்புறப்படுத்தி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.