திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை தொழிற்பேட்டை முதல் பிரதான சாலை 7-வது குறுக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து, கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக, மின்கம்பத்தை சரிசெய்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.