பாளையங்கோட்டை தியாகராஜ நகர் சப்-வே முக்கியமான சாலை ஆகும். இந்த சாலையில் சைக்கிள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் பயன்படுத்தும் இந்த சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இருள்சூழ்ந்து கிடப்பதால் அங்கு மின்விளக்கு வசதி செய்துதருமாறு கேட்டுக்கொள்கிறேன்.