பந்தலூர் அருகே உள்ள நெல்லிமேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் இதுவரை தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க மின்சாரத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.