தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2026-11-15 15:27 GMT

ஏற்காடு முருகன் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வழியாக செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக வீடுகளை உரசி செல்லும் வகையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். காற்று, மழை காலங்களில் இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியே. தற்போது இந்த பகுதி மக்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பியை ஆபத்தான மரக்கட்டை மூலம் உயர்த்தி உள்ளனர். இதனை மின்வாரிய அதிகாரிகள் கருத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்