சாய்ந்து நிற்கும் மின்கம்பம்

Update: 2026-11-22 12:33 GMT

குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாம் அருகே உள்ள பந்துமை பகுதிக்கு செல்லும் சாலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் நிற்கிறது. அந்த வழியாக தினமும் பள்ளி வாகனங்கள், ராணுவ வாகனங்கள், பஸ்கள் சென்று வருகின்றன. அந்த மின்கம்பம் சாலையில் மிகவும் தாழ்வான நிலையில் சாய்ந்து நிற்கிறது. இதனால் வாகனங்களின் மேல் பகுதியில் உரசி விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்