உடுமலை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் அழுத்த கம்பங்கள் சில சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றை நிமிர்த்தி பராமரிப்பு செய்ய மின்வாரிய ஊழியர்கள் முன்வரவில்லை. இதனால் மின் கம்பிகளின் பலத்தில் கம்பம் தொங்கியவாறு உள்ளது. இதன் காரணமாக மின்கம்பிகள் தாழ்வாக செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளதுடன் பலத்த காற்று மற்றும் மழைக்காலங்களில் அவை முறிந்து விழும் அபாயமும் நிலவுகிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கணபதிபாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கிருஷ்ணன், உடுமலை.