விபத்து அபாயம்

Update: 2026-11-22 13:00 GMT

வாழ்வச்சகோஷ்டம் அருகே உள்ள மருதூர்குறிச்சி பகுதியில் சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல மின்கம்பங்களில் தெருவிளக்குகளுக்கான சுவிட்சு பெட்டி அமைக்கப்படாமலும், சுவிட்சுகள் திறந்த வெளியில் சிறுவர்களுக்கு எட்டும் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுவிட்சுகளை சிறுவர்களுக்கு எட்டாத உயரத்தில் பெட்டியுடன் பாதுகாப்பாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்து ராபர்ட், காட்டாத்துறை.

மேலும் செய்திகள்