அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் - லிங்கத்தடிமேடு சாலையில் உள்ள மின்கம்பத்தின் மீது செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளன. இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நிலையில், இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.