செஞ்சி அருகே மேல்சேவூர் கிராமத்தில் பிரதான சாலையையொட்டி உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் சாய்ந்து கிடக்கின்றன. காற்று பலமாக வீசும்போது மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பெரும் விபத்து ஏற்படும் முன்பு சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கவும், தேவைப்படும் இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமைக்கவும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.