ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டுக்குட்பட்ட கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதியில் ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரால் திருவிழா காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.