அடிக்கடி மின்தடை

Update: 2026-11-22 17:11 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சூரன்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரக பகுதியில் முன் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக காலை பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் தங்களது அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் மின்தடையால் குறு, சிறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்