ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாைவ அடுத்த சின்ன தகரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் நிலத்தில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அது, சேதம் அடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனப் பல முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், சின்னதகரகுப்பம்.