உயர் கோபுர மின்விளக்கை மீண்டும் அமைப்பார்களா?

Update: 2026-11-22 17:58 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து பாணாவரம் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் பன்னியூர் கூட்ரோடு உள்ளது. இந்தக் கூட்ரோடு வாலாஜா-பனப்பாக்கம், காவேரிப்பாக்கம்-சோளிங்கர் எனப் பிரதான நெடுஞ்சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாகும். பன்னியூர் கூட்ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக அங்கிருந்த உயர் கோபுர மின்விளக்கு அப்புறப்படுத்தப்பட்டது. அதை மீண்டும் அமைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவராஜ், பன்னியூர். 

மேலும் செய்திகள்