மலைப்பாதையில் மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2026-11-22 17:55 GMT

ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அந்த வளைவுகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு மின்விளக்குக்கூட எரியவில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொண்டை ஊசி வளைவுகளில் உள்ள மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-எம்.கதிரவன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்