சென்னை நெற்குன்றம், பட்டேல் சாலை குண்டும் குழியுமாக மோசமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் அகத்தியர் நகர் 2-வது தெருவில் உள்ள மின் கம்பத்தில், மின்வயர்கள் தாழ்வாக உள்ளது. இதனால் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் வரும்போது அடிக்கடி வயர் அறுந்து விழுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து தரவேண்டி அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.