பென்னாகரம் முதல் நாகமரை வரை செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் ஏரியூர் அருகே உள்ள காமராஜா பேட்டையில், சாலையின் குறுக்கே செல்லும் மின் கம்பிகள், மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் சாலையை கடக்கும் கனரக வாகனங்கள், ரிக் வாகனங்கள், கரும்பு மற்றும் தீவனப்புல் ஏற்றி செல்லும் வாகனங்கள் இந்த கம்பிகளை உரசியவாறு செல்கின்றன. இதனால் விபத்து நேர வாய்ப்புள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?