தென்தாமரைகுளம் பேரூராட்சி முகிலன்குடியிருப்பில் உள்ள இலந்தையடிவிளை அரசு உயா்நிலைபள்ளியின் அருகில் சாலையோரம் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காண்பபடுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்கம் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதன், முகிலன்குடியிருப்பு.