உயர்கோபுர மின் விளக்கு ஒளிருமா ?

Update: 2026-10-12 11:21 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி கோவிலுக்குஎதிரே உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இது சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைகின்றனர். எனவே காட்சிபொருளான மின்விளக்கு ஒளிருமா ? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பொதுமக்கள், திருமணஞ்சேரி.

மேலும் செய்திகள்