திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் கணேஷ் நகர், முதல் தெருவில் வீட்டுகளின் அருகே மின்கம்பங்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று அதன் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழும் அபாய நிலையில் எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.