செங்கல்பட்டு மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் போலீஸ் எதிரில் உள்ள பழையனூர் சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளன.இதனால் அந்த பகுதியில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்அதிகப்படியான வாகனங்கள் செல்வதால், போதுமான வெளிச்சம் இல்லாமல் அடிக்கடி அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.