உடைந்து விழும் நிலையில் மின் கம்பம்

Update: 2026-10-18 11:35 GMT
விக்கிரவாண்டி பேரூராட்சி குத்தாம் பூண்டி ரோடு, பானு நகர் பகுதியின் அருகில் உள்ள இரண்டு மின் கம்பங்கள் முழுவதுமாக சேதம் அடைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. கொஞ்சம் வேகமாக காற்று அடித்தால் கூட விழும் நிலையில் உள்ளது. மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் இந்த கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை வைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்