தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2026-10-25 15:47 GMT

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரம் தெற்குப் பகுதியில் உள்ள குறளப்பன்பட்டி பிரிவு சாலை வழியாக மதுக்கரை, லந்தக்கோட்டை, கூடலூர், ஆனைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இரவு, பகலாக வாகனங்கள் சென்று வருகின்றன. அப்பகுதியில் குடியிருப்புகளும் உள்ள நிலையில், பிரிவு சாலை இருளில் மூழ்கிக் கிடப்பதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்டஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்