தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டரில் தெருவிளக்கின் மின் வயர்கள் சாலையில் பரவி கிடக்கிறது. இரவு நேரங்களில் வயர்கள் கிடப்பது தெரியாமல் அதன் மீது ஏறி செல்லும் மோட்டார் சைக்கிள்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் வெளியே பறவிக் கிடக்கும் மின் வயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், அறந்தாங்கி.