ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி பகுதியில் உள்ள சேவை சாலைகளில் உள்ள மின் விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைகின்றனர்.மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே அதிகாரிகள் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?