மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகர், முகமதுஷாபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் அப்பகுதியினரிடையே விபத்து மற்றும் திருட்டு அச்சம் எழுந்துள்ளதால் உடனடியாக எரியாத மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும்.