வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் நேதாஜிநகர் சந்திக்கும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால், அங்குள்ள மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அய்யப்பன், வேலூர்.