பழுதடைந்து மின்விளக்குகள்

Update: 2026-11-01 09:25 GMT

காங்கயம் அடுத்த சிவன்மலை கோவில் நுழைவு வாயில் ரவுண்டானா முன்பு மின்கோபுர கம்பம் உள்ளது. மலைப்பாதை நுழைவு வாயில் மற்றும் ரவுண்டானாவை சுற்றி பொதுமக்களுக்கு வெளிச்சம் தரும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மின்விளக்குகள் பழுதடைந்தன. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் வரும் தீபாவளி பண்டிகை முடுந்து சிவன்மலை கோவிலில் கடைபிடிக்கப்படும் கந்தசஷ்டி கவச திருவிழா ஆரம்பிக்க உள்ளது. எனவே இப்பகுதியில் திரளான பக்தர்கள் வந்து செல்வர். அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மின்விளக்கை சீரமைத்து ஒளிரச்செய்ய வேண்டும்.

மோகித், சிவன்மலை.

மேலும் செய்திகள்